QR Code

Scan to get the app

App Icon

Navagraham

navagraham

books and reference

Verifed

4.74

Rating

24.45 MB

Download Size

57.52 MB

Install Size

Verifed

4.74

Rating

24.45 MB

Download Size

57.52 MB

Install Size

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல் ஆளுகைப்படுத்தல் எனும் பொருளுடையது. நவக்கிரகம், ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவக்கிரங்களை தமிழில் ஒன்பான் கோள்கள் என்று அழைக்கின்றனர்.

1. சூரியன் (Sun) - ஞாயிறு,கதிரவன்
2. சந்திரன் (Moon) - திங்கள்
3. செவ்வாய் (Mars) - நிலமகன், செவ்வாய்
4. புதன் (Mercury) - , கணக்கன், புலவன்,அறிவன்
5. குரு (Jupiter) - சீலன், பொன்னன்,வியாழன்
6. சுக்கிரன் (Venus) - சுங்கன், கங்கன்,வெள்ளி
7. சனி (Saturn) - காரி, முதுமகன்
8. ராகு (Raghu) - கருநாகன்
9. கேது (Kethu) -செந்நாகன்

இந்திய சோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும்.

இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன..

கோள்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே சோதிடத்தின் அடிப்படையாகும். புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே சோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் சோதிட நூல் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது.

நவக்கிரக கோயில்கள்

நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.அனைத்தையும் ஒரு சேர வழிபடும் வழமை கிபி11ம் நூற்றாண்டில் தோன்றியது. அப்போது முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிகாலமாகும். தஞ்சை மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற கோயில் அமைக்கப்பட்டது. தற்போது அதனை சூரியனார் கோயில் என அழைக்கிறோம். இந்தக் காலத்தின் தொடர்ச்சியாக சண்டேள ஆட்சியாளர்கள் ஒடிசா மாநிலத்தில் கோனார்க் எனுமிடத்தில் சூரியனுக்கு தனிக் கோயில் அமைத்தனர். 
பல்லவர்கள் மற்றும் சோழர்களின் காலத்தில் கற்றளிகளாக உயரமமான மேடையின் மீது நவக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டன. தற்போது இந்த வழமையே பெரும்பாலான சிவாலயங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

1. சூரியனார் கோவில்
2. திங்களூர் கைலாசநாதர் கோயில்
3. சீர்காழி வைத்தீசுவரன் கோயில்
4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
5. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்
7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
8. திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

செயலி சிறப்பம்சங்கள்

★ நவக்கிரக திருக்கோயில் .
★ நவக்கிரக பரிகாரம்.
★ நவக்கிர ஸ்லோகம் .

தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..

ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.

தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.

ScreenshotScreenshotScreenshotScreenshotScreenshotScreenshot

Safety starts with understanding how developers collect and share your data. The developer provided this information and may update it over time.