இண்டஸ் ஆப்ஸ்டோரைப் பற்றி
இண்டஸ் ஆப்ஸ்டோர் ஆனது சிறப்பான வடிவமைப்பு மற்றும் தொடர்புடைய செயலி நுகர்வுக்கான உள்ளடக்கத்துடன், இந்திய நுகர்வோருக்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டு ஆப் ஸ்டோர் ஆகும், இது செயலியைக் கண்டறியவும் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. இண்டஸ் ஆப்ஸ்டோர் முற்றிலும் பாதுகாப்பான ஸ்டோர் ஆகும், ஏனெனில் அது பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் முன்பாக ஒவ்வொரு செயலியும் தொடர்ச்சியான செயலி ஸ்கேன் மற்றும் மதிப்பாய்வு செயல்முறைகளை மேற்கொள்கிறது.
அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் இண்டஸ் ஆப்ஸ்டோர் கிடைக்குமா?
தற்போது, இண்டஸ் ஆப்ஸ்டோர் வரையறுக்கப்பட்ட சாதனங்களில் கிடைக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் இதை விரிவுபடுத்துவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இண்டஸ் ஆப்ஸ்டோரை ஆதரிக்கும் சாதனங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், [email protected]இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், மேலும் தகவலுடன் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.
இண்டஸ் ஆப்ஸ்ரோரைப் பயன்படுத்த, போன்பே பதிவு செய்யப்பட்ட எண்ணை நான் வைத்திருக்க வேண்டுமா?
இல்லை, இண்டஸ் ஆப்ஸ்டோரைப் பயன்படுத்த போன்பே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உள்நுழைவு பக்கத்தில் ஏதேனும் எண்ணை நீங்கள் உள்ளிட்டு OTP உடன் சரிபார்க்கலாம். குறிப்பு: கேஷ்பேக்/வெகுமதிகளைப் பெற, நீங்கள் போன்பே செயலியை நிறுவியிருக்க வேண்டும்.
இண்டஸ் ஆப்ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது பாதுகாப்பானதா?
ஆம், இது முற்றிலும் பாதுகாப்பானது. பதிவிறக்க அணுகுவதற்கு முன், இண்டஸ் ஆப்ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு செயலியும் கவனமாக கையாளப்பட்டு, ஏதேனும் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் அல்லது தகவல் உள்ளதா எனச் சரிபார்க்கப்படும்.
என்னால் செயலியைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?
செயலியின் பெயரைச் சரியாக உள்ளிடவும் அல்லது உங்கள் தேடல் சொற்களை பொருத்தமாக மாற்றியதை உறுதிசெய்யவும். கூடுதலாக, டெவலப்பர் இன்னும் அந்தச் செயலியை எங்கள் ஸ்டோரில் பதிவேற்றாமல் இருக்கலாம். அப்படியெனில் விரைவில் அவற்றைப் பெற நாங்கள் பணிப்புரிகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், அதனைப் பெறும் செயல்முறையை விரைவுப்படுத்த, செயலியைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க, [email protected]இல் நீங்கள் தொடர்புகொள்ளலாம். மேலும், அந்தச் செயலியைப் பெற்று, உங்களுக்கு நிறுவத் தயாரானவுடன் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.
இண்டஸ் ஆப்ஸ்டோரில் எனது செயலியை எவ்வாறு வெளியிடுவது?
உங்கள் செயலியை வெளியிட, நீங்கள் இண்டஸ் ஆப்ஸ்டோர் டெவலப்பர் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். "எனது செயலியைப் பட்டியலிடு" என்பதைக் கிளிக் செய்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, செயலி மதிப்பாய்விற்குச் சமர்ப்பித்திடுங்கள்: • செயலி விவரங்கள். • செயலி கூடுதல் விவரங்கள். • இந்திய மொழிப் பட்டியல். • டெவலப்பர் தகவல் & தரவு பாதுகாப்பு. • செயலியை பதிவேற்றுங்கள். உங்கள் செயலியை பட்டியலிடுவதற்கான படிகளை அறிய "இங்கே" கிளிக் செய்யுங்கள்.
ஸ்டோரில் இருந்து செயலியைப் பதிவிறக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?
இது பின்வரும் ஒன்றின் காரணமாக இருக்கலாம், • பலவீனமான இணைய இணைப்பு • குறைந்த சாதன சேமிப்பகம். • உங்கள் சாதனத்தின் OS பதிப்பு செயலியை ஆதரிக்காமல் இருக்கலாம். • உங்கள் சாதனத்திற்கு செஉயலி இணக்கமாக இல்லாமல் இருக்கலாம். மேலே உள்ளவற்றைச் சரிபார்த்து, செயலியை மீண்டும் பதிவிறக்க முயலுங்கள். உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களை [email protected]இல் தொடர்பு கொள்ளுங்கள்.
இண்டஸ் ஆப்ஸ்டோரில் நான் எவ்வாறு சிக்கலைப் புகாரளிப்பது அல்ல து கருத்தைப் பகிர்வது?
கருத்தைப் பகிர அல்லது மதிப்புரையைச் சேர்க்க, இண்டஸ் ஆப்ஸ்டோரில் உள்ள செயலி மதிப்புரை அம்சத்தைப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், மதிப்புரையை பொருத்தமற்றதாகக் குறிக்கலாம். ஆப்ஸ்டோர் தொடர்பான சிக்கல்களுக்கு, கருத்துடன் [email protected]இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
கிடைக்கக்கூடிய மொழி பட்டியலில் எனது மொழியைக் காண முடியவில்லை.
ஆப்ஸ்டோர், ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் மட்டுமே தற்போது கிடைக ்கிறது. எதிர்காலத்தில் கூடுதல் மொழிகள் சேர்க்கப்பட்டால், அதுவும் மொழிப் பட்டியலில் காணப்படும். தற்போது கிடைக்கப்பெறும் மொழிகள்: - இந்தி - மராத்தி - குஜராத்தி - தெலுங்கு - தமிழ் - பஞ்சாபி - மலையாளம் - ஒடியா - கன்னடம் - பெங்காலி - அசாமிஸ் - உருது.
குறைத் தீர்க்கும் கொள்கை என்னென்ன?
L1 மற்றும் L2 நிலைகளில் தங்கள் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், 10 நாள்கள் அல்லது அதற்கும் மேலாக தங்கள் பிரச்சனைக்கு திருப்திகரமான தீர்வு வழங்கப்படாததாக பயனர் கருதினால், அவர்கள் குறையை எழுப்பலாம்.
இண்டஸ் ஆப்ஸ்டோர் ஆதரவை நான் தொடர்புகொள்வது எப்படி?
நீங்கள் டெவலப்பர் என்றால், எங்களுடன் தங்களது பிரச்சைனையைத் தெரிவிக்க, உங்கள் டெவலப்பர் போர்ட்டலில் உள்நுழைந்து திரையின் கீழ் இடது மூலையில் உள்ள அரட்டை ஐகானைத் தட்டவும். நீங்கள் நுகர்வோர் என்றால், உங்கள் பிரச்சைனையை [email protected]இல் புகாரளிக்கவும்.