அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இண்டஸ் ஆப்ஸ்டோரைப் பதிவிறக்குவது பாதுகாப்பானதா?
ஆம்! இண்டஸ் ஆப்ஸ்டோரைப் பதிவிறக்குவது முற்றிலும் பாதுகாப்பானது. நாங்கள் ஆப் ஸ்டோர் தளத்தில் பத்தாண்டுகளுக்கும் அதிகமான அனுபவமுள்ள போன்பே குழுவினால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியாகும்.
இண்டஸ் ஆப்ஸ்டோரை நான் எவ்வாற ு பதிவிறக்குவது?
உங்கள் மொபைல் உலாவியில் இருந்து இந்த வலைதளத்தில் (indusappstore.com) பதிவிறக்கு பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் இண்டஸ் ஆப்ஸ்டோரை நீங்கள் பதிவிறக்கலாம். APK கோப்பு உங்கள் மொபைல் சாதனத்தில் பதிவிறக்கப்படும், அதைத் திறந்து நிறுவுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். மாற்றாக, உங்கள் இணைய உலாவியில் வலைத்தளத்தை (indusappstore.com) பார்வையிட்டு பதிவிறக்க இணைப்பைப் பெற, QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள் அல்லது உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
எந்த தளங்களில் நான் இண்டஸ் ஆப்ஸ்டோரைப் பயன்படுத்த முடியும்?
இண்டஸ் ஆப்ஸ்டோர் ஆனது ஆண்ட்ராய்டு OS 8 மற்றும் அதற்கு மேல் இயங்கும் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் பயன்படுத்தக் கிடைக்கிறது.
இண்டஸ் ஆப்ஸ்டோரிலிருந்து நான் எவ்வாறு செயலிகளை பதிவிறக்குவது?
உங்கள் மொபைலில் இண்டஸ் ஆப்ஸ்டோரை நிறுவியவுடன், உங்கள் மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழைந்து, செயலியை நிறுவ அனுமதி வழங்கி, உங்களுக்குப் பிடித்த எல்லா செயலிகளையும் உலாவி, பதிவிறக்க தொடங்கலாம்.
இண்டஸ் ஆப்ஸ்டோரிலிருந்து பதிவிறக்கப்பட்ட செயலிகளி ல் ஏதேனும் வைரஸ்கள் அல்லது தீம்பொருள்கள் இருக்குமா?
இண்டஸ் ஆப்ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு செயலியும் எங்கள் ஆன்டிவைரைஸ் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்களால் கடுமையான 7 நிலை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுகிறது.